fbpx

வந்தே சாதாரன் என்ற புதிய ஏசி இல்லாத சாதாரண ரயிலை உருவாக்க திட்டம்..!

வந்தே பாரத் போல வந்தே சாதாரன் என்ற ஏசி அல்லாத நவீன வசதிகள் கொண்ட புதிய ரயில் பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீண்ட தூர பயணத்திற்காக ஸ்லீப்பர் வசதிக்களுடன் கூடிய இந்த ரயிலை சென்னையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள். இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது பெரும் புரட்சியை செய்து வருகிறது என்றால் அது மிகையல்ல. புதிதாக ஒவ்வொரு ரூட்டிலும் வரிசையாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரூட்டில் அறிமுகப்படுத்தப்படும் போதும் அந்த ரூட்டில் மக்கள் அந்த ரயிலுக்கு அமோகமான வரவேற்பை கொடுக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி நவீன வசதிகள் கொண்ட ஏசி வசதி இல்லாத புதிய ரயில் பெட்டிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய ரக ரயிலுக்கு வந்தே சாதாரன் என பெயரிட்டுள்ளது. சாதாரன் என்றால் சாதாரண என அர்த்தம். இந்த ரயில் முழுவதும் சென்னை ஐசிஎப் ஆலையிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது‌. இந்த வந்தே சாதாரன் ரயிலை தயாரிக்க ஒரு ரயிலுக்கு ரூபாய் 65 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வந்தே சாதாரன் முதல் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே சாதாரன் ரயிலில் மொத்தம் 24 எல்ஹச்பி கோச்கள் இணைக்கப்பட உள்ளன.

வந்தே பாரத் ரயில் போல வந்தே சாதாரன் ரயிலிலும் பல மார்டனான அம்சங்கள் பொருத்தப்பட உள்ளன. முக்கியமாக பயோ வேக்கம் டாய்லெட், பயணிகள் தகவல் சிஸ்டம், ஒவ்வொரு சீட்டுக்கும் தனித்தனியான சார்ஜிங் பாயிண்ட்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு கோச்சிலும் சிசிடிவி கேமரா, வந்தே பாரத் ரயில் போல தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய கதவுகள் இதில் பொருத்தப்பட உள்ளன. வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் டிக்கெட் விலையும் மிக அதிகமாக இருக்கிறது பணக்காரர்கள் மட்டுமே பயணிக்க கூடிய ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில் இருக்கிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே சாதாரன் ரயிலை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இந்த ரயில்கள் செயல்பாட்டுக்கு வரும்போது அதன் டிக்கெட் விலை மிக குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயிலை பயன்படுத்த முடியும். தற்போது இருக்கும் ரயிலுக்கும் இந்த ரயிலுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் வேகம் தான். தற்போது உள்ள ரயில்கள் 130 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் உடன் இருந்தாலும், இந்த ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறனுடன் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக தான் இந்த ரயில் ஆட்டோமேட்டிக் கதவுகள் பொருத்தப்படுகிறது.இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே சாதாரன் ரயிலுக்கு அடுத்ததாக வந்தே மெட்ரோ ரயில்கள் லோக்கல் ரயில்களுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Maha

Next Post

கெட்ட வார்த்தையில் திட்டுவார் தோனி - இஷாந்த் சர்மா

Thu Jul 6 , 2023
மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. எப்போதும் மைதானத்தில் அமைதியாக இருந்து வீரர்களை வழிநடத்துவதால், அவரை ‘கூல் கேப்டன்’ என்று ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் தோனியின் இன்னொரு பக்கத்தை பற்றி அவரது தலைமையின் கீழ் பல போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் […]

You May Like