fbpx

‘அப்படி நடந்தா என்ன ஆகுறது’ குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவரான ஆல்யா மானசா, தனது இரு குழந்தைகளுன் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் விஜய் டிவி தொடர்களில் நடித்தாலும், தற்போது இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகின்றனர்.

இப்போது இவருக்கு அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகளை பார்த்துக் கொண்டே இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர். அவர்கள் உடன் இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஆல்யா நேற்று தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்கிறார். அப்போது குழந்தைகளை கைப்பிடித்து அழைத்து செல்வதற்கு பதிலாக அவர்களை அங்கும் இங்கும் நகர விடாமல் இருப்பதற்காக தனது கழுத்தில் துப்பட்டாவை போட்டுக்கொண்டு அதன் இரு முனைகளிலும் குழந்தைகளின் கையை இறுக கட்டியிருக்கிறார். மேலும், ’உங்கள் குழந்தைகளையும் சமாளிக்க இதுபோன்று செய்யுங்கள்’ எனவும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆல்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர். குழந்தைகள் வெவ்வேறு திசைகளில் ஓடினால் உங்களுக்கு சங்கு தான் என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்திருக்கிறார். இதை மற்றவர்களையும் செய்யச் சொல்லி சொல்லாதீர்கள்’ எனவும் ஆல்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

https://www.instagram.com/reel/C6obJu3hHdS/?igsh=dXcyMGwzaWkyMmwy

Next Post

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்..!! என்ன காரணம் தெரியுமா..?

Wed May 8 , 2024
தங்கள் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், தனது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. வணிக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தடுப்பூசி போடுவதால் TTS – த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா என்ற நோயை ஏற்படுத்தும் […]

You May Like