சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்கள் மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்துவிடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகிடும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில், பள்ளி செல்ல மறுத்து அடம்பிடிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ”எல்லாம் தலையெழுத்தா இருக்கு. ஒரு உடம்பு சரியில்லாத பையனை இப்படி பாடுபடுத்தலாமா? நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் நியாயமா?” என பல வாக்குவாதங்களை தனது தாயிடம் வைத்துள்ளார். இந்த சம்பவத்தினை நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். சிறுவனின் குறும்புத்தனமான பேச்சு வேற லெவலில் தற்போது ஹிட் ஆகியுள்ளது.
சிறுவனின் கியூட் வீடியோவை காண… https://www.facebook.com/100000629744349/videos/844843750126961/