fbpx

”கடைசி வரைக்கும் அதை சொல்லவே இல்ல”..!! பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவம்..!!

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி இல்லை எனவும், கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் குறித்து ஆலோசிக்க பாமகவின் பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி இல்லை எனவும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்யவும், கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

பக்தர்களின் நல்வாழ்விற்காக விரதம் இருக்கும் அம்மன்.! இந்த அதிசய திருக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?

Fri Feb 2 , 2024
திருச்சியில் உள்ள சமயபுரத்தில் கண்ணனூர் என்ற பகுதியில் பெருவளை வாய்க்காலின் கரையில் அமைந்துள்ளது இந்த மகாசக்தி அம்மன் திருக்கோயில். எந்த கோயில்களுக்கு சென்றாலும் கடவுளை வேண்டி பக்தர்கள் தான் விரதம் இருந்து வழிபட்டு வருவார்கள். ஆனால் இந்த கோயிலில் வித்தியாசமான நம்பிக்கை இருந்து வருகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நலனிற்காகவும் அம்மன், 28 நாட்கள் வரை பட்டினி விரதம் […]

You May Like