பொதுவாக திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்துப் பெண்களுக்கும் கடினமான சூழலாக தான் இருக்கும். திருமணம் முடிந்து கண்ணீருடன் செல்லும் மணப்பெண்ணை, குடும்பத்தினரும் கண்ணீருடன் அனுப்பி வைப்பார்கள். ஆனால், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல மறுக்கும் இளம் பெண்ணை, அவரது குடும்பத்தினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வழியனுப்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்து தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். அவரை சமாதானம் செய்து குடும்பத்தினர் வீட்டு வாசல் வரை அழைத்து வருகின்றனர். ஆனாலும், மணமகன் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதனால் பொறுமையை இழந்த குடும்பத்தினர், இளம் பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காரில் ஏற்றி விடுகின்றனர்.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குடும்பத்தை விட்டு பிரியும் வருத்ததில் இருக்கும் அவரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது அவரின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் பிறக்கும் பெண்களுக்கு உணர்வுகள் இருக்க கூடாதா? ஏன் இந்த வலுக்கட்டாய வழி அனுப்புதல் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.