சிம்புவுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ள தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் கௌதம் வாசுதேவவ் மேனனுக்கு பைக்கை பரிசாக அளித்துள்ளார்.
வெந்துதணிந்தது காடு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து விக்ரம் திரைப்பட கமலஹாசன் பாணியில் ஐசரிகணேசும் பரிசுகளை அள்ளிக் கொடுத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அன்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு ஜெயமோகன் எழுத்தின் அடிப்படையாகக் கொண்டு இப்படம் வெளியாகி உள்ளது. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் , சித்திக் மலையாள நடிகர் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. முதல் நாளிலேயே 10.86 கோடி வசூலை ஈட்டி வர்த்தகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக படக்குழுவினருக்கு பரிசளிக்க நினைத்த ஐசரிகணேஷ் சிம்புவுக்கு டொயோட்டோ வெல்ஃபையர் என்ற காரை பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் விலை ரூ.92 லட்சம் .
இதே போல கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இந்த பைக்கில் தயாரிப்பாளரை கூட்டி கொண்டு இயக்குனர் வலம் வந்த புகைப்படமும் வைரலாகி வருகின்றது.