fbpx

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் அடையாள அட்டையில் புதிய மாற்றம்..! என்ன தெரியுமா?

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையில் புதிதாக கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் வருகின்ற 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்தலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி 100 பேர் அமரக்கூடிய வகையில் 2 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

சட்டத்திற்குப் புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: அதிமுக  பொதுக்குழு மேடையில் வைத்திங்கம் ஆவேசம் | admk meet updates - hindutamil.in

இந்நிலையில், 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையில் கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என பெஞ்சமின் தெரிவித்துள்ளார். கடந்த முறை பொதுக்குழு நடைபெற்ற போது, அடையாள அட்டையில் உறுப்பினர்கள் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில், போலி அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக சில புகார்கள் எழுந்தன. இதனால், இந்த முறை அடையாள அட்டையில் கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு: எடப்பாடி ஆதரவு அலை, ஜூலை 11 அடுத்த பொதுக்குழு -  வெளிநடப்பு செய்த ஓபிஎஸ் - BBC News தமிழ்

அதிமுக பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனே அதிமுக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் பொதுக்குழுவில் எந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது? குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரம் எவ்வாறு முடிய போகிறது என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

பூஸ்டர் டோஸ் கோவிட் தடுப்பூசிக்கான இடைவெளி 6 மாதங்களாக குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு...

Thu Jul 7 , 2022
கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும் பூஸ்டர் டோஸுக்கும் இடையிலான இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக அரசாங்கம் குறைத்துள்ளது. தடுப்பூசி பற்றிய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு – நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) – இரண்டாவது ஜப் மற்றும் பூஸ்டர் டோஸ் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பரிந்துரைத்தது. இந்நிலையில் இந்த இடைவெளியை குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.. முன்னதாக, இரண்டாவது டோஸுக்கும் பூஸ்டர் டோஸுக்கும் இடையிலான […]

You May Like