பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படுவதாகவும், இதனால், வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவை ஊக்கப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்தல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிகொணர்தல், தொழில் முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், தொழில்முறை வளர்ச்சி , English Lab, Communication lab அல்லது Foreign Language ஆகிய 5 புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.