fbpx

விஷம் குறித்து அறிய புதிய பட்டய படிப்பு!… இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் அறிமுகம்!

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் விஷம் குறித்து படிப்பதற்கு புதிய பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லண்டன் ரேடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி கூறியதாவது, இங்கிலாந்தில் உள்ள ரேடிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் விஷங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்பில், விஷம் பற்றியும், அவைகளின் தன்மை பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக படிப்பார்கள். மேலும் பாம்புகளின் விஷம், முதுகெலும்பு இல்லாத ஊர்வனவைகளான பூரான், சிலந்தி, தேள்களின் விஷம் குறித்து விரிவாக படிப்பார்கள். மேலும் தாவரங்களில் உள்ள, விஷங்கள், அவற்றின் விளைவுகள் பற்றியும் படிப்பார்கள். முக்கியமாக விஷக்கடிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பார்கள் என்பது பற்றியும், உயிரை கொல்ல கூடிய விஷத்தை மருந்துகளாக பயண்படுத்துவது, குறித்தும் விரிவாக படிப்பார்கள்.

இந்த படிப்பானது, 10 வாரங்களுக்குள் முடித்து விடும். அவ்வாறு முடித்த மாணவ, மாணவிகளுக்கு, இதற்காக சான்றிதல்கள் வழங்கபடும். அதனை வைத்து மாணவர்கள், விஷங்களை பற்றிய ஆராய்ச்சியிலும், பெரியமருந்து நிறுவனங்களிலும் சேர்வதற்கான, வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த படிப்பில் சேர 12வது முடித்து இருந்தால் போதுமானது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி, கோவையை சார்ந்த பொதுமக்கள், வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயணடையலாம். வாரத்தில் எதாவது ஒரு நாள், 2மணி நேரம் மட்டும் பயிற்சியளிக்கப்படும். இதற்காக சிறப்பு பயிற்சி மையம் இங்கு அமைக்கபட்டுள்ளது. இதனை கோவையை சார்ந்த அனைவரும் படிக்கலாம் என்றார்.

Kokila

Next Post

உரிமைத்தொகை ரூ.1,000 பெற இன்னும் விண்ணப்பிக்கவில்லையா..? இன்று சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Aug 18 , 2023
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற 1.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து […]

You May Like