புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லோசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இட்ஙகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ஆம் தேதி வலுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.