fbpx

நவ.9இல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! பயங்கர மழை..!! வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

வங்கக் கடலில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக கடலோரப் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் பெய்யத் தொடங்கிய மழை தென் மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை கொட்டியது. டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்தே மழை பெய்து வரும் நிலையில், அந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி நகர்ந்து வட இலங்கையின் ஊடாக சென்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

நவ.9இல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! பயங்கர மழை..!! வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

ஏற்கனவே தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்று சுழற்சியும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் இணைந்து தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருமாறியுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக சில இடங்களில் மழை பெய்வது குறைந்திருந்தாலும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும்.

நவ.9இல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! பயங்கர மழை..!! வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

அப்போது சென்னை, புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் முதல் மன்னார் வளைகுடா வரையில் உள்ள கடலோரப் பகுதிகளில் மழை தீவிரம். புதிய காற்று சுழற்சி பாக் ஜலசந்தி வழியாக நுழைந்து மன்னார் வளைகுடா வழியாக சென்று குமரிடக் கடல் பகுதிக்கு செல்லும் என்பதால், 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள், மன்னார் வளைகுடா பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும். அதேபோல வட கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும். 7, 8, 9ஆம் தேதிகளில் ஒரு இடைவெளி ஏற்பட்டு மழை குறையும். 10ஆம் தேதி மீண்டும் ஒரு தீவிர காற்றழுத்தம் உருவாகி அதிக மழையை கொடுக்கும்.

நவ.9இல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! பயங்கர மழை..!! வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இது 10, 11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என கூறினார். மீனவர்கள் 8, 9ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Chella

Next Post

ஜாலி...! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...! எந்த மாவட்டத்தில் தெரியுமா....?

Sat Nov 5 , 2022
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தொடர் மழையால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், […]

You May Like