fbpx

ஒரு முறை சார்ஜ் செய்தால் 129 கிலோ மீட்டர் போகும்..! புக்கிங் கட்டணம் வெறும் 500 ரூபாய் மட்டுமே..! Okaya EVயின் புதிய பைக்…

ஜப்பானைச் சேர்ந்த ‘ஒகாயா EV'(Okaya EV) எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமானது, கடந்த மார்ச் மாதம் ஃபெரட்டோ (Ferrato) என்ற புதிய ப்ரீமியம் எலெக்ட்ரி பைக் பிராண்டு ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்டின் கீழ் ப்ரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது அந்த ஃபெரட்டோ பிராண்டின் கீழ் டிஸ்ரப்டார் (Disruptor) என்ற புதிய ப்ரீமியம் பைக் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்குக்கான முன்பதிவு தற்போதே ஃபெரட்டோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்கள் ஃபெராட்டோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று Disruptor மோட்டார் சைக்கிளை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த EV-யை புக்கிங் செய்யும் முதல் 1,000 வாடிக்கையாளர்கள் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மின்சார மோட்டார் சைக்கிளை முதலில் புக்கிங் செய்யும் 1000 பேருக்கு புக்கிங் கட்டணம் வெறும் 500 ரூபாய் மட்டுமே. அதன் பிறகு புக் செய்வோருக்கு கட்டணம் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disruptor மாடலானது பெர்மனென்ட் மேக்னட் சிங்கரனஸ் மோட்டார் மூலம் இயக்கப்படும். இந்த PMSM மோட்டார் 6.37 kW பீக் பவரை உருவாக்கும் என்று நிறுவனம் கூறி உள்ளது. மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மாடலில் 3.97 kWh LFP பேட்டரி பேக் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 129 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லுமாம். மேலும் புதிய மோட்டார் சைக்கிளின் ரன்னிங் காஸ்ட்டானது 1 கிமீ-க்கு 25 பைசாவாக இருக்கும் என்று ஒகாயா நிறுவனம் கூறியுள்ளது.

மீண்டும் அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஆபத்து..!!

shyamala

Next Post

கட்டிப்பிடித்தால் உலக சாதனையா? மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸில் இடம்பிடித்த மாணவர்....

Thu May 9 , 2024
கானா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் வனவியல் மாணவர் ஆவர். சிறுவயதில் இருந்தே அவருக்கு இயற்கை மீதான ஆர்வமும் கொண்டவர். எனினும், அதனை பாதுகாப்பதிலும் மிகுதியான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கானாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் வனவியல் துறையில் தனது இளங்கலைப் […]

You May Like