fbpx

விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு..!! 6 மணி நேரத்திற்கு மேல் மின்தடை கிடையாது..!!

தமிழ்நாட்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு கொடுக்காத நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்காத பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே பழுதடைந்த மீட்டர்களை 7 நாட்களுக்குள் மாற்றாத நுகர்வோர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு இருந்தால் நுகர்வோருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மறந்தும் மாம்பழங்களுடன் இந்த உணவை சேர்த்து சாப்பிடாதீங்க..!! மீறினால் ஆபத்து உங்களுக்குத்தான்..!!

Sun May 7 , 2023
தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. மிகவும் இனிப்பான சுவை மிக்க இந்த மாம்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது. பொதுவாகவே மாம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். மாம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் சி, ஏ மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இருப்பினும், மாம்பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அப்படி எந்தெந்த உணவுகளோடு மாம்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை இந்தப் பதிவில் […]

You May Like