New FASTag rules: ஃபாஸ்ட் டேக் பாலன்ஸை சரி பார்ப்பதற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் பிப்ரவரி 17, 2025 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாஸ்ட் டேக் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சில்லறை பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் டோல் கட்டணம் செலுத்திய பிறகு பயணிகளுக்கு சில்லறை வழங்கும்போது நேரம் எடுத்துக் கொண்டது. இதற்காக கொண்டுவரப்பட்ட ஃபாஸ்ட் டேக் பயணிகளுக்கு மட்டுமல்லாமல்.. சுங்குச்சாவடிகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமைந்தது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 28, 2025 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் இனி சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து சரிபார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்த பாலன்ஸ் கொண்டிருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் ஃபாஸ்ட் டேக்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.
ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலும் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்திருந்தால் “எர்ரர் கோட் 176” உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
Readmore: திமுக அமைச்சர் உறவினர் பல கோடி மதிப்புள்ள கனிம வளம் கொள்ளை…! அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்