fbpx

வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்புக்கு புதிய படிவம்..! வெளியான முக்கிய தகவல்..!

2023 ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சீர்திருத்த சட்டம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி குமார் கூறுகையில், “ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக விண்ணப்பிப்பதற்கு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த விரைவில் வசதிகள் செய்யப்படும் என்றார். தற்போது தேர்தல் ஆணையம் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் படிவங்களை மிகவும் எளிமையானதாக மாற்றி அமைத்துள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட படிவங்கள் வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்புக்கு புதிய படிவம்..! வெளியான முக்கிய தகவல்..!

ஒவ்வொரு வாக்காளரும் வரும் 1ஆம் தேதி முதல் 2023 ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமது ஆதார் எண்ணை, படிவம் 6 பி-ன் மூலம் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். இதன் நோக்கம், வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சேர்க்கைகளை நீக்குவதற்கும் ஆகும். வரும் 1ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று ஆதார் எண்ணை வாக்காளர்களிடம் இருந்து பெறும் பணி தொடங்க உள்ளது. ஆதார் எண்ணை வழங்கவோ அல்லது தெரிவிக்கவோ இயலாதமைக்காக வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது.

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாக்குச்சாவடி சீரமைத்தல், இரட்டை பதிவுகளை கண்டறிந்து நீக்குதல் ஆகியவை வருகிற 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை நடக்கிறது. துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும். நவம்பர் 9ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 2023 ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..! அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு..!

Sat Jul 30 , 2022
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனைக் கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என […]

You May Like