நாடாளுமன்றத்தில் வருமான வரிச் சட்ட திருத்தம் இன்று கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இதில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
⇛ வருமான வரி தாக்கல் செய்வதை இன்னும் எளிமையாக்க புதிய இணையதளம் அல்லது செயலி உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.
⇛ வருமான வரி சட்டம் எளிமையாக்கப்பட்டு, அனைவரும் புரிந்துகொள்ளும் படி மாற்றப்பட உள்ளது.
⇛ பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், அதில் உண்மை இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
⇛ புதிய வருமான வரி regimeல் வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம்.
⇛ பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் நடைமுறையில் இருக்கும். ஆனால், பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
⇛ பிஸ்னஸ் வருமான வரி என்பது தற்போது சிக்கலாக இருக்கும் நிலையில், இதை அனைவரும் புரிந்துகொள்ளும்படி மாற்றப்படும்.
நாடாளுமன்ற மக்களவையில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், புதிய வருமான வரி சட்டத்திற்கான மசோதா பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.