fbpx

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! சூறாவளி காற்றுடன் கனமழை..!! மக்களே எச்சரிக்கை..!!

தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! சூறாவளி காற்றுடன் கனமழை..!! மக்களே எச்சரிக்கை..!!

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அருகில் நகரும் என்பதால் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இந்த காரணத்துக்காக தான் என்னை தப்பா பேசுறாங்க’..!! நடிகர் வடிவேலு ஓபன் டாக்..!!

Sun Dec 4 , 2022
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வடிவேலு, தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது பிரச்சனையெல்லாம் முடிந்து மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார். இவர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை […]
’இந்த காரணத்துக்காக தான் என்னை தப்பா பேசுறாங்க’..!! நடிகர் வடிவேலு ஓபன் டாக்..!!

You May Like