சங்கரன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருமணமான நான்கே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன் கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா , இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு கௌசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கார்த்திக் ராஜாவின் பெற்றோர் சம்மதத்துடன் பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது.
நேற்று காலை கார்த்திக் ராஜா வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார் . வீட்டில் கௌசல்யா மட்டும் தனியாக இருந்திருக்கின்றார். வேலையை முடித்துவிட்டு வந்த கார்த்திக் ராஜா கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். வெகு நேரமாக வீடு திறக்கப்படவில்லை. இதனால் கதவை தட்டியுள்ளனர். அப்போது உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது மின்விசிரியில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் கவுசல்யா. இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சங்கரன் கோவில் காந்தி நகர் பகுதியில் பெரும் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு வீடே விழாக் கோலம் பூண்டு திருமண கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் இன்று வீடே அலறல் சத்ததாத்தால் நிரம்பியது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கெளசல்யா தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.