தீபாவளி என்றாலே புது படங்கள் ரிலீஸ் ஆகுவது வழக்கம். எப்போதுமே பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளியின்போது ரிலீஸ் ஆகும். ஆனால், இந்தாண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு இல்லையென்றாலும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கும் படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அப்படி, இந்தாண்டு ரிலீஸ் ஆகவிருக்கும் படங்களின் விவரம் இதோ…
ஜப்பான்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஜப்பான். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 200 கோடி மதிப்புள்ள தங்கத்தை ஒரு நகைக்கடையில் இருந்து கொள்ளையடிக்கும் திருடன், அவன் தான் ஜப்பான். அதன் பிறகு போலீஸிடம் இருந்து அவன் எப்படி தப்பிக்கிறான், போலீசாரிடம் என்னென்ன மாதிரியான யுக்திகளை பயன்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் கதை. இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.10) வெளியாகிறது.
ரெய்டு
நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த படம் தான் ரெய்டு. இந்த படத்தில் வெள்ளக்காரதுரை படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்திருக்கிறார். இப்படத்தை இயக்குனர் கார்த்தி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சாம் CS இசையமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.10) வெளியாகிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். பீரியாடிக் ஆக்ஷன் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சினிமாவை பற்றிய சினிமா என்பதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த படம் ஜப்பான் மற்றும் ரெய்டு போன்ற திரைப்படங்களுடன் தீபாவளிக்கு மோதுகிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.10) வெளியாகிறது.