போக்குவரத்துத்துறையின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன..
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிகளை போக்குவரத்துத்துறை சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்பட வேண்டும்.. வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.. இந்த தேர்வுகளுக்கு கணினி மூலம் முன்பதிவு செய்திட ஏதுவாக, பொதுமக்களின் வசதிக்கேற்ப நாள் மற்றும் நேரத்தினை தேர்ந்தெடுத்து வழிவகை செய்யப்பட வேண்டும்..
மேலும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும்.. இந்த உத்தரவுப்படி அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..” என்று கூறப்பட்டது..
இந்நிலையில் போக்குவரத்துத்துறையின் இந்த உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 2500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்துள்ளன.. இந்த உத்தரவை திரும்ப பெறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்துள்ளன.. இதனால் டிரைவிங் பள்ளிகள் மூலம் லைசனஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..