fbpx

செந்தில் பாலாஜிக்கு வந்த புதிய சிக்கல்..!! உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை..!! மீண்டும் எப்போது..?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்துக்கு வரும் 20 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை கோடைக்கால விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவர் முதலில் கைதாகி சிறையில் இருந்த போதிலும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார். அவர் அமைச்சராக தொடர்வதே அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். ஜாமீன் கோரியும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை இந்த மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதாகவும் இதனால் மருத்துவ காரணங்களால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது என்றும் இதை நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்குவது ஆதாரத்தைக் கலைக்கக் காரணமாக அமைந்துவிடும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே பல கைதிகள் 2, 3 ஆண்டுகள் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளதாகவும் அவ்வளவு ஏன் வழக்கு கூட விசாரணைக்கு வராமல் பலர் சிறையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை இன்று விசாரிப்பதாகக் கூறினர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று ஆஜராகாததால், அவரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்துக்கு வருகின்ற 20ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி வரை கோடைக்கால விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!! எந்த தேதியில் தெரியுமா..?

Chella

Next Post

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

Thu May 16 , 2024
தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த […]

You May Like