ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தை இன்று (மார்ச் 1) முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.