fbpx

மகிழ்ச்சி செய்தி…! விரைவில் வருகிறது புதிய ரேஷன் அட்டை…!

பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயனுறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 7.5.2021 முதல் 30.6.2023 வரை 15 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இணைய வழி மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,509 புதிய குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இந்தக் குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களிடம் சேருவதற்கு முன்னரே அட்டைதாரர்கள் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை நியாயவிலைக் கடைகளில் பெறும் வகையில் குடும்ப அட்டைகள் செயலாக்கம் செய்யப்பட்டு அந்த விவரம் குடும்ப அட்டை எண்ணுடன் அட்டைதாரர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண்ணை கடைப் பணியாளரிடம் தெரிவித்து விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின்னர் நியாயவிலைக் கடையில் அவர்களுக்கான இன்றியமையா பண்டங்களை அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Vignesh

Next Post

காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ - பாஜகவை விளாசிய மம்தா பானர்ஜி

Sun Apr 21 , 2024
அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி (Prasar Bharati), தனது இந்தி செய்தி சேனல் டிடி (தூர்தர்ஷன்) சேனலின் லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில், தூர்தர்ஷன் சேனலின் லோகோவின் நிறம் மாற்றப்பட்டிருப்பதற்கு […]

You May Like