fbpx

கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்..! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

கடன் செயலிகளுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், “கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும், கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். இதில், கடன் சேவை வழங்குநர் அல்லது 3ஆம் தரப்பினர் கணக்குகளின் வழியாக செயல்படுத்தக் கூடாது. டிஜிட்டல் கடன் வழங்குநருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கிகள் போன்ற ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். கடன் வாங்கியவர் அதை செலுத்த தேவையில்லை.

கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்..! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

கடன் பெறுபவரின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பை தானாக அதிகரிப்பது தடை செய்யப்படுகிறது. கடன் பெற்றவர் அசல் மற்றும் புரொபோஷனேட் வட்டியை அபராதம் இல்லாமல் செலுத்தி டிஜிட்டல் கடன்களை விட்டு வெளியேறலாம். அதற்கான கூலிங் ஆப் காலம் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும். மேலும், டிஜிட்டல் கடன் தொடர்பான புகார்களை கையாள்வதற்கு நோடல் குறை தீர்க்கும் அதிகாரி இருப்பதை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்”. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

பசு கடத்தல் வழக்கு : திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டலை கைது செய்தது சிபிஐ

Thu Aug 11 , 2022
பசு கடத்தல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்ரதா மண்டல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். பார்த்தா சாட்டர்ஜியின் சர்ச்சைக்குரிய கைதுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பசுக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அனுப்ரதா மண்டல் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசுக்கடத்தல் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அனுப்ரதாவுக்கு சிபிஐ அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பி உள்ளனர்.. […]

You May Like