RBI: பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக 100 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்படவுள்ளதாகவும், இனி அவை செல்லாது எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. அதோடு அவை செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது பழைய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாதவை என ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளதாகவும், அதனால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற தகவல்களும் வேகமாக பரவின. இந்த தகவல்கள் தவறானவை எனவும் பழைய நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அதாவது 100 ரூபாய் நோட்டுகளை நீங்கள் எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும் இந்த நோட்டுகளை வாங்க எந்த கடைக்காரரும், மறுக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தவறானது என்றும், நோட்டுகளை மாற்ற கடைசி தேதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: ராமரின் இலங்கை – அயோத்தி பயணம்!. எத்தனை நாட்கள் ஆனது தெரியுமா? கூகுள் மேப்ஸின் வைரல் பதிவு!