ஆதார் அட்டை என்பது மத்திய அரசு சார்பில் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக் கூடிய ஒரு அடையாள அட்டையாகும். உங்களின் முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அண்மை காலமாக ஆதார் அட்டையை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பொதுமக்கள் இவற்றிலிருந்து தப்பிக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆதார் அட்டைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
பான்-ஆதார் இணைப்பு நிலையை எப்படி சரிபார்ப்பது..?
* முதலில் www.incometax.gov.in செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Quick Links’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இணைப்பு ஆதார் நிலையை கிளிக் செய்து, பான் மற்றும் ஆதார் அட்டை எண்ணை வழங்கவும்.
* உங்கள் பான் மற்றும் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், “உங்கள் பான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது” என்ற செய்தி தோன்றும்.
* அப்படி இணைக்கப்படாத பட்சத்தில், ‘பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை’ என்ற செய்தி தோன்றலாம்.
* இதையடுத்து, இணையதளத்தின் இடது பக்கத்தில் உள்ள விரைவு இணைப்புகள் பிரிவின் கீழ் தோன்றும் ‘ஆதார் இணைப்பு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையின் படி விவரங்களை உள்ளிட வேண்டிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசியாகும். இதேபோல பல தேதிகள் கடைசி தேதியென்று வந்திருக்கிறது. ஆனால், பான்-ஆதார் இணைப்புக்கு அபாராதம் மட்டுமின்றி, புது ரூல்ஸாக செயலிழப்பு செய்யப்படவுள்ளன. இதனால், பரிவர்த்தனைகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, உடனடியாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைத்துவிடுங்கள்.
Read More : ”நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார்”..!! ஜாபர் சாதிக் வழக்கு அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு..!!