புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் நிகழும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரி பொதுநிர்வாகதுறையின் மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 112ன் கீழ் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. அதன் படி புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் வேகக்கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வேகத்தை மீறும் வாகனங்களை ஸ்பீடு மீட்டர் மூலம் வேகத்தை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.