fbpx

”பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தக்கம்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 2ஆம் தேதி பள்ளி திறந்த பிறகு, தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் பள்ளிகள் திறந்த பிறகு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல், ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை மீண்டும் நடத்துவது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல், அதனை எப்படி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

”யாரும் பதற வேண்டாம்”..!! மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்..!! தேமுதிக பரபரப்பு அறிக்கை..!!

Wed Dec 27 , 2023
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நடிகர் விஜயகாந்த், ஏற்கனவே மியாட் மருத்துவமனையில் 3 வார காலம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி சிகிச்சை முடிந்து, நலமுடன் வீடு திரும்பினார். பின்னர் நடைப்பெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது […]

You May Like