fbpx

தீபாவளிக்கு களைகட்டும் புதிய ரக பீர்கள்..!! டாஸ்மாக் கடைகளில் குவியும் மதுப்பிரியர்கள்..!!

தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல நூறு கோடிகள் வருமானம் வருகின்றன. தீபாவளியை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அடுத்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்து ரூ.464 கோடியாக உயர்ந்தது.

மேலும், இதனை இலக்காக வைத்து ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் முக்கிய பண்டிகை தினங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், தற்போது டாஸ்மாக்கிற்கு புதிதாக 2 பீர் மதுபானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர் பாட்டில்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை ரூ.160 ஆகும்.

இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்குள் 5 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மது பானங்களின் விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் பீர் ரகங்களுக்கு கடும் கிராக்கியும், தட்டுப்பாடும் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

செலவு மட்டும் செய்தால் போதும்!… ரூ.4 லட்சம் கிடைக்கும்!… பிரதமரின் சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா?

Sat Nov 11 , 2023
மக்களுக்கு காப்பீட்டு உதவிகளை வழங்க 2 முக்கியமான திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களாகும். ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவில் ரூ. 4 லட்சம் வரை காப்பீடு பெறலாம். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். சொந்த […]

You May Like