FBI : சில ஆப்களை டவுன்லோட் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடி ஹேக்கர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான FBI எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை Android மற்றும் iPhone பயனர்களுக்கு பொருந்தும்.
கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்களை மேம்படுத்த பல்வேறு புதுப்பிப்புகளை செயல்படுத்தினாலும், பயனர்களை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் சில பயன்பாடுகளைத் தவிர்க்குமாறும் FBI கேட்டுக்கொள்கிறது, இந்த அச்சுறுத்தலுக்கு “Phantom Hacker.” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த தீங்கிழைக்கும் ஆப்ஸ் மூலம் மோசடி செய்பவர்கள் சாதனங்களுக்குள் ஊடுருவி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
பயனர்கள் இந்த ஆப்ஸை டவுன் லோடு செய்தவுடன், வங்கி அதிகாரிகள் என்று கூறி அவர்களின் தகவலைச் சேகரித்து பண மோசடியில் ஈடுபடுவதாகவும், இது தவிர, மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறோம் என்று நம்பவைத்து தனிநபர்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவந்ததாக FBI கூறுகிறது. மேலும், வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட இணைப்புகள் மூலம் எந்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்துகிறது.
இந்தப் பயன்பாடுகளைப் பதிவிறக்க வேண்டாம்: மின்னஞ்சல் அல்லது APK கோப்புகள் மூலம் அனுப்பப்படும் பயன்பாடுகளைத் தவிர்க்கவும். மூன்றாம் தரப்பு கடைகளில் இருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும். சமூக ஊடக தளங்களில் இருந்து திசைதிருப்பப்பட்ட இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி? உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆப்ஸ்களை நிறுவுவதற்கு முன், பயன்பாட்டின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும், ஆப்ஸ் டெவலப்பரை முழுமையாக ஆராய்ந்து, தொடர்வதற்கு முன் பிற பயனர்களின் மதிப்பீடுகளைச் சரிபார்க்கவும். வங்கி அல்லது நிதி பயன்பாடுகள் என்று வரும்போது, உங்கள் நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்து உறுதிசெயத பின்பே அவற்றைப் பதிவிறக்கவும்.
கூகுள் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர்கள் இரண்டிலும் மோசடி செய்பவர்கள் அடிக்கடி போலியான அப்ளிகேஷன்களை அப்லோட் செய்கிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள். பயனர்கள், தெரிந்தோ தெரியாமலோ, இந்த ஏமாற்றும் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து, கவனக்குறைவாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: சர்ச்சையில் சிக்கிய ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்..!! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!