என்னதான் உலகிலேயே பிரபலமான இடமாக இருந்தாலும் சரி, அதை எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி அந்த இடத்திற்கு என்று தனித்துவம் இருக்க வேண்டும் என்றால் அந்த இடத்திற்கான ஏதாவது ஒரு அடையாளம் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அடையாளம் உள்ள தீவுதான் நியூசிலாந்தில் உள்ள கேம்பல் தீவு. இந்த தீவில் ஒரே ஒரு சிட்காமரம் உள்ளது இந்த தீவு நியூசிலாந்தின் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறதாம்.
இந்த தீவில் இந்த சிட்கா மரத்தை தவிர்த்து வேறு மரங்கள் ஏதும் இல்லை. இந்த மரத்திற்கு உலகிலேயே தனிமையான மரம் என்ற சிறப்பு இருக்கிறது. இதன் பிறகு இந்த மரத்திலிருந்து மற்றொரு மரம் சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் ஆக்லாந்து தீவில் தான் இருக்கிறது.
இதே வகையான சிட்கா மரம் பசுபிக் பெருங்கடலுக்கு மறுபுறம் பூமியின் அரைக்கோளத்தை கடந்து தான் உள்ளது திருவிழாவில் தொலைந்து போன குழந்தை ரயில் ஏறி வெளிநாட்டிற்கு சென்றதைப் போல இவ்வளவு தன்னந்தனியாக இந்த மரம் எப்படி இந்த தீவை வந்தடைந்திருக்கும்? என்ற யோசனை அனைவரின் மனதிலும் எழத்தான் செய்கிறது.
இந்த தீவு நியூசிலாந்தின் தெற்கு கோடியில் இருக்கின்ற ஒரு தீபா ஆகும் இந்தப் பகுதி முழுவதும் ஆக்ரோஷமான மேற்கு திசை காற்று வீசும் இந்த காற்று எந்த செடியையும் மற்றும் மரத்தையும் சில அடிகளுக்கு மேல் வளர விடாது என்று சொல்லப்படுகிறது.
இங்கே உறைய வைக்கும் பணி இல்லை என்றாலும் கூட இதமான காலநிலை என்பது அறவே இல்லை. வெப்பநிலை அரிதாகவே 10 சென்டிகிரேட்டுக்கு மேல் அதிகரிக்கும். வருடத்தின் அனைத்து நாட்களிலும் மேகமூட்டமாகவும் மழையாகவும் காணப்படும். வருடத்தில் 40 நாட்கள் மட்டுமே மழை இன்றி இருக்கும் ஒரு வருடத்தில் 600 மணி நேரம் மட்டுமே சூரிய வெளிச்சம் இங்கே படும் அதாவது ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் இந்த பகுதியில் சூரிய வெளிச்சம் படும் என்று சொல்லப்படுகிறது.
லார்ட் ரன் பெர்லி என்ற பிரிட்டிஷ் மன்னர் நியூசிலாந்தை ஆட்சி செய்த போது கடந்த 1897 முதல் 1904 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த தீவில் இந்த மரத்தை அவர் நட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு சாதாரணமான சிட்கா மரம் 60 மீட்டர் வரையும் வளரும் ஆனால் இந்த பகுதியில் உள்ள இந்த மரத்தின் உயரம் 10 மீட்டர் தான் 100 வருடங்களுக்கும் மேலாக தனிக்காட்டு ராஜாவாக இந்த மாதம் வளர்ந்து நிற்கிறது கடந்த 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த மரத்தை அதன் தண்டுகளை மட்டுமே வெட்டி பாதுகாத்து வருகிறார்கள்.