fbpx

நெல்லை அருகே புது பெண்ணை கடத்திய 5 பெண்கள்! காவல்துறை தீவிர விசாரணை!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய வழக்கில் 5 பெண்களை கைது செய்துள்ளது போலீஸ். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடித்த ஸ்ரீரங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் முருகன் வயது 24. இவரும் அப்பகுதியைச் சார்ந்த சுமிகா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு
பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டை விட்டு வெளியேறிய இந்த காதல் ஜோடி கடந்த மாதம் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் 25ஆம் தேதி தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்ட இந்த தம்பதி நேற்று அவர்களது சொந்த ஊர் திரும்பினார். இதனை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மணமகன் முருகன் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர் மேலும் அவரை தகாத வார்த்தைகளாலும் திட்டி உள்ளதாக தெரிகிறது. இத்தோடு நிற்காமல் சுமிகாவின் தந்தை மற்றும் அவருடன் வந்த 12 பேர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் சுமிதாவின் தந்தை உட்பட 12 பேர் மீது புகார் அளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ இது தொடர்பாக சுமிகாவின் பெற்றோர் முருகேசன் மற்றும் பத்மா உட்பட 12 பேர் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார். மேலும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டுக் கொண்டு வர தனிப் படைகளை அமைத்து தேடி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு மேலும் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு கூறுகிறது. காதல் திருமணம் செய்ததால் மணப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதேபோன்று சில நாட்களுக்கு முன் தென்காசி பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட கிருத்திகா என்ற பெண்ணை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு பெண் பெற்றோர்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பகுதியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

'எப்புட்றா..' ஐடி ஊழியரிடமே 10 லட்சம் 'ஆட்டைய' போட்ட ஹேக்கிங் கும்பல்!

Fri Feb 17 , 2023
பான் கார்டு புதுப்பித்து தருவதாக கூறி அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சென்னையைச் சார்ந்த மென்பொருளாளரிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சென்னை விருகம்பாக்கம் போலீஸ் ஆர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்த இவர் தனது […]

You May Like