fbpx

பள்ளி மாணவர்களுக்கான நியூஸ்: இனி சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும்…

மழையால் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை முதல் மழை பெய்து வருவதால் அன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் நாட்களில் மாணவர்களின் நிலையையும், பெற்றோர்களின் நிலையையும் கருதி விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மிகக் கனமழை நாட்களைத் தவிர கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

எனவே எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதோ அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் முழு வேளை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் இறுதி வரை பெய்யும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்தப் பருவமழையில் அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இந்தநிலையில், இந்த மழை காரணமான விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை ஈடுகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Next Post

மகனுக்காக வாடகைத்தாயான தாய், பேத்தியை ஈன்றார்…!!

Sat Nov 5 , 2022
தனது மகன் மற்றும் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க தாயே , வாடகைத்தாயாக மாறி மகனுக்கு குழந்தையை பெற்றுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் உட்டா பகுதியில் வசித்து வந்தவர்கள் நான்சி ஹாக் குடும்பத்தினர். இவரதுமகன் ஜெஃப் ஹாக். சில ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. 6 நாட்களுக்குப் பின்னர் நேர்மறை முடிவு கிடைத்தது. பின்னர் 3 மாதங்கள் ஆனது. […]

You May Like