fbpx

அடுத்த 3 மணிநேரத்தில் அலர்ட்!… 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!… வானிலை ஆய்வு மையம்!

சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. டிசம்பர் 15, 16 ஆகி தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, அரியலூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

அச்சுறுத்தும் நோரோ வைரஸ்!… 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!... அறிகுறிகள்! தடுக்கும் வழி இதோ!

Fri Dec 15 , 2023
இங்கிலாந்தில் நோரோ வைரஸால் 1500க்கும் மேற்பட்டோ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நோய் கட்டுப்பாட்டு மையங்களின் (CDC) கூற்றுப்படி, நோரோவைரஸ் வயிறு அல்லது குடல் அழற்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான வழக்குகளை விட இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அதிகம். ஸ்காட்லாந்து,ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின், இந்த வைரஸ் நோய் மற்றும் இல்லாத அபாயத்தை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நோரோ வைரஸ் […]

You May Like