Chenab river water: பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், செனாப் நதியின் பாக்லிஹார் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் ஓட்டத்தை இந்தியா துண்டித்துள்ளது. மேலும் ஜீலம் நதியின் கிஷன்கங்கா திட்டத்திலிருந்து வெளியேறும் நீரைக் குறைக்கவும் தயாராகி வருகிறது,
ஒரு வாரம் நீண்ட ஆலோசனைகள் மற்றும் நீரியல் பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்தியா பாகலிகார் அணையில் சேற்றுநீக்கம் பணிகளை தொடங்கியுள்ளது. அணையின் மதகு கதவுகள் திறப்பு குறைப்பட்டதால் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரின் அளவு 90% வரை குறைந்துள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர்வித்யுத் ஆணையத்தின் (National Hydroelectric Power Corporation) ஒரு அதிகாரி தெரிவித்தார். “பாக்லிஹார் நீர் மின் திட்டத்தின் கதவுகளை நாங்கள் மூடிவிட்டோம். நீர்த்தேக்கத்தின் வண்டல் மண் அகற்றும் பணியை நாங்கள் செய்துவிட்டோம், அதை மீண்டும் நிரப்ப வேண்டும். இந்த செயல்முறை சனிக்கிழமை தொடங்கப்பட்டது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சனிக்கிழமை பாகிஸ்தான் தனது தரையிலிருந்து தரைக்கு பாயும் ஏவுகணையை பரிசோதித்த சில மணி நேரங்களுக்குள் பாக்லிஹார் அணையிலிருந்து நீரை நிறுத்தி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. மேலும், நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குரேஸ் பள்ளத்தாக்கில் வடமேற்கு இமயமலையில் அமைந்துள்ள முதல் மெகா நீர்மின் நிலையமான கிஷன்கங்கா அணையும் “மிக விரைவில்” பாரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அதிலிருந்து கீழ்நோக்கி நீர் ஓட்டம் நிறுத்தப்படும். இந்த இரண்டு அணைகளின் வடிவமைப்புகளுக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அணைகளால் நீரை அதிகளவில் நிறுத்தி வைக்க முடியாது. இருப்பினும், நீர் எப்போது வெளியேறலாம் எப்போது அதை நிறுத்தி வைக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இது இந்தியாவின் மிக முக்கியமான ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்திருந்தது. அதில் ஒன்றாகப் பல ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதி மற்றும் அதன் துணை நதிகள் மீது நடைபெற்று வரும் நான்கு நீர் மின் திட்டங்களில் இந்தியா நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவை 2027-28 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
Readmore: சூப்பர் வாய்ப்பு..! 35 வயது பூர்த்தியாகி இருந்தால் போதும்… ரூ.15 லட்சம் வரை வழங்கும் தமிழக அரசு..!