fbpx

அடுத்ததாக ஆதி-நிக்கிகல்ராணி வீட்டில் குவா!!குவா சத்தம்…!!

சமீப காலமாகவே கடந்த இந்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணமான நட்சத்திர ஜோடிகளுக்கு அடுத்தடுத்து குழந்தை பிறந்து வருகின்றது.அந்த வகையில் ஆதி-நிக்கிகல்ராணி வீட்டில் கூட’குவா!!குவா’ சத்தம் ஒலிக்க உள்ளது.

நடிகர் ஆதி மிகக் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காந்த பார்வையால் பெண்களை கவர்ந்தவர். ஸ்மார்ட் தோற்றம் நேர்த்தியான நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. மிருகம் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது. ஈரம், மரகத நாணயம் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதே போல் நிக்கிகல்ராணியும் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். சசிகுமாரின் குடும்ப பாங்கான திரைப்படமான ராஜவம்சம் என்ற திரைப்படத்திலும் நிக்கிகல்ராணி கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இது தவிர சில த்ரில்லர் மற்றும் ஹரர் படங்களிலும் நடித்திருக்கின்றார்.

கடந்த மார்ச் மாதம் ஆதியும் நிக்கிகல்ராணியும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் சில நாட்களில் நிச்சயம் செய்து கொண்டனர். பின்னர் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தில் மெஹந்தி, சங்கீத் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. அதில் நடிகர் ஷிரிஷ், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆதி – நிக்கி கல்ராணி திருமண படங்கள் இணையத்தில் லைக்ஸ் குவிந்தது. இந்நிலையில் நிக்கிகல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் பிரபலமான ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதி சமீபத்தில் குழந்தை பெற்றனர். இதையடுத்து பாலிவுட் பிரபலமான பிபாஷா பாசுவுக்கு குழந்தை பிறந்து வீட்டில் குவா குவா சத்தம் கேட்கின்றது. அடுத்தபடியாக நிக்கிகல் ராணி-ஆதி வீட்டிலும் குவா குவா சத்தம் கேட்கப்போகுது என திரைத்துறை வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதியா..? தேவசம் போர்டு பரபரப்பு பதில்..!!

Thu Nov 17 , 2022
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்ததற்கு தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தியதால், இந்த உத்தரவை அமல்படுத்துவதில் கேரள அரசு தயக்கம் காட்டியது. இந்நிலையில், இந்த வருடத்திற்கான மண்டல பூஜைக்கு நடை திறந்து உள்ள […]
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! பிற்பகலுக்குப் பிறகு மலையேற அனுமதியில்லை..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

You May Like