fbpx

அடுத்த சர்ச்சை..!! இந்தோனேசியாவில் 99 குழந்தைகள் பலி..!! இருமல் மருந்துகளுக்கு தடை..!!

இந்தோனேசியாவில் இந்தாண்டில் சிறுநீரகம் பாதித்து 99 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனைக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

ஆப்பிரிக்கா, காம்பியாவில் இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டது தான் இதற்கு காரணம் என்று காம்பியா அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக இந்திய மருந்து நிறுவனமான மெய்டனுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இருமல் மருந்தால் தனது நாட்டில் இந்தாண்டு 99 குழந்தைகள் பலியாகி உள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

அடுத்த சர்ச்சை..!! இந்தோனேசியாவில் 99 குழந்தைகள் பலி..!! இருமல் மருந்துகளுக்கு தடை..!!

இருமல் மருந்து காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறியுள்ள அந்நாடு, இந்த இருமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதா? அல்லது உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டதா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தோனேசிய சுகாதாரத்துறை அமைச்சர் புதி குனாதி சாதிக்கின் கூறுகையில், ‘குழந்தைகள் இறப்பு காரணமாக அனைத்து வகை இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார். உயிரிழப்பை ஏற்படுத்திய இருமல் மருந்துகளின் பெயர்களை இந்தோனேசியா அரசு வெளியிடவில்லை.

Chella

Next Post

#BREAKING: கனமழை எதிரொலி..!! இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Fri Oct 21 , 2022
கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி நேற்று காலை அந்தமான் கடல் […]

You May Like