மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்பட்ட அரிய தொற்று நோயினால் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளையை உண்ணும் Naegleria Fowleri அமீபாவால் ஏற்படும் அபாயகரமான மூளைத் தொற்று ஆகும். இந்த வகை அமீபா தேங்கி நிற்கும் நீர் ஆதாரங்களில் காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் இந்த மூளைத்தொற்று காரணமாக 36 வயதான ஒருவர் உயிரிழந்தார்.. அந்த நபருக்கு அடிப்படை நோய் எதுவும் இல்லை, மேலும் அவருக்கு முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) இருப்பது கண்டறியப்பட்டது..
Naegleria Fowleri என்றால் என்ன? முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்பது நெக்லேரியா ஃபோலேரியால் ஏற்படும் ஒரு அரிய மூளைத் தொற்று ஆகும்.. அமீபா மனிதர்களிடம் இருப்பது மிகவும் அரிதான நிகழ்வு. ஏரிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுகள், தொழில்துறை கழிவுகள், இயற்கை நீர் ஆதாரங்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் அல்லது குளோரினேட் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்ற சூடான நன்னீர் மற்றும் வாட்டர் ஹீட்டர்களிலும் கூட இந்த அமீபா செழித்து வளரும். ஆனால் இந்த அமீபா கடலில் வாழாது.
அமீபா நெக்லேரியா மிகவும் அரிதான நுண்ணுயிரியாகும்.. இது வளர, வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்க வேண்டும். மைக்ரோஸ்கோப் இல்லாமல் பார்க்க முடியாது. நாக்லேரியா ஃபோலேரி மூக்கு வழியாக உடலில் நுழைவதன் மூலம் மக்களை பாதிக்கிறது. பெரும்பாலோர் நீச்சலின் போது அமீபாவால் பாதிக்கப்படுகின்றனர். இது மூக்கு வரை சென்று மூளை திசுக்களை அழிக்கிறது.
என்னென்ன அறிகுறிகள்..? தலைவலி, காய்ச்சல், குமட்டல், கழுத்து விறைப்பு, சமநிலை இழப்பு, வலிப்பு ஆகியவை அறிகுறிகளாகும். மூளை தொடர்பான அறிகுறிகள் தோன்றிய ஐந்து நாட்களுக்குள் இந்த நோய் புரவலரைக் கொன்றுவிடும். இந்த தொற்று நோய்க்கு மருந்து இல்லை. இது மக்களிடம் இருந்து மக்கள் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அசுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலமோ பரவாது.