மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு 38%ல் இருந்து அது 42 சதவீதமாக அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
இதனிடையே மார்ச் 8 ஆம் தேதி ஹோலிக்குப் பிறகு, மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவான ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக உள்ளது. ஆனால் ஊழியர்கள் இப்போது ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றனர். இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி உயர்வு என அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது..
மேலும் 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.. மார்ச் மாதத்தில் இதுகுறித்து அரசு முடிவு எடுக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்..
அதன்படி ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றும் பட்சத்தில், லெவல் 3 பிரிவில் உள்ள அரசு ஊழியர்கள் ரூ.11,880-37,554 வரை பெறலாம் என்றும், லெவல் 13/14 ஊழியர்கள் ரூ 1,44,200-2,15,900 பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனவே அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி மற்றும் அகவிலைப்படி நிலுவை தொகை ஆகியவை குறித்து மத்திய அரசு விரைவில் நற்செய்திகளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..