fbpx

எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சிக்கல்.. தேர்தல் ஆணையத்தில் புதிய மனு..

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்துள்ளார்..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி அமர்வு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளரை எதிர்க்கும் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராரக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்..

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்துள்ளார்.. உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது.

கட்சியின் அடிப்படை விதிகளை தனக்கு சாதகமாக மாற்றி, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.. எனவே பொதுச்செயாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Maha

Next Post

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது.. கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில் நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

Mon Apr 3 , 2023
கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்று முன்னணி உயிரியலாளர் சேகர் மாண்டே தெரிவித்துள்ளார்.. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முன்னாள் இயக்குநரும், முன்னணி உயிரியலாளருமான சேகர் மாண்டே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் “கொரோனா பூஸ்டர் தடுப்பூசியின் நன்மை பற்றிய அறிவியல் சான்றுகள் பலவீனமாக உள்ளன.. எனவே பூஸ்டர் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது.. குறைந்த நோய் […]

You May Like