நாட்டின் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து வகையான கடன்களுக்கு வட்டியை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால், எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் என பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவிகிதத்தில் இருந்து 7.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு எஸ்பிஐ வங்கி மீண்டும் அதிர்ச்சி அளித்துள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணம் இதுவரை ரூ.99 (வரியும் சேர்த்து) இருந்த நிலையில், மார்ச் 17ஆம் தேதி முதல் ரூ.199 ஆக (வரியும் சேர்த்து) அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐயில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.