fbpx

அடுத்த அதிர்ச்சி..!! டெல்லி, உபி-யில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்..!!

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்படுகிறது.

நேபாளத்தில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 ரிக்டரில் பதிவாகி இருந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நேபாளத்தில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நேபாள நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் பகுதி. இதனால் ஜாஜர்கோட், ருக்கும் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் பெரும் சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், நேபாளம் நாட்டில் இன்று பிற்பகல் 4.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.6 அளவுகோலாக பதிவாகியுள்ளது.

கடந்த 3 நாட்களில் இது 2-வது முறையாகும். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்படுவதால் வட இந்திய மாநில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர்..!!

Mon Nov 6 , 2023
ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்ட வீடியோவில் தீபாவளி போனஸ் குறித்து அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “டெல்லி அரசு ஊழியர்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு தலா ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 80,000 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதால், அதற்காக டெல்லி அரசு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். டெல்லி அரசில் பணியாற்றும் ஊழியர்கள் […]

You May Like