fbpx

அடுத்த ஷாக்கிங்..!! ஃபேஸ்புக் ’ப்ளு டிக்’கிற்கும் இனி கட்டணம்..!! எவ்வளவு தெரியுமா..? மெட்டா நிறுவனம் அறிவிப்பு..!!

ட்விட்டரை அடுத்து ஃபேஸ்புக் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு உரிய ஆவணங்களை செலுத்தி அதன் பயனாளர்கள் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். ஒருவருவருடைய அதிகாரப்பூர்வ கணக்கு இதுதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, பெயருக்கு அருகில் புளூ டிக் குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக டிவிட்டர் பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டிவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து டிவிட்டர் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், எலான் மஸ்க் டிவிட்டரில், டிவிட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் டிவிட்டர் பயனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க் புளுடிக் கட்டணம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த வாரம் நாங்கள் மெட்டா வெரிஃபைட் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளோம். அரசின் ஆவணங்கள் மூலம் உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும், நீல நிற பேட்ஜைப் பெறவும், உங்கள் சமூக வலைதள கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பைப் பெறவும் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த புதிய அம்சம் தொடர்பான எங்களின் சேவைகள் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும். மெட்டா ஃவெரிபைடு தொடர்பாக சாதாரண இணைய தளத்திற்கு மாதம் 992 ரூபாயும் (11.99 அமெரிக்க டாலர் ), iOS எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தளத்திற்கு மாதம் 1,240 ரூபாயும் (14.99 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்படும். இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறோம். விரைவில் பல நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்’ என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

பிரபல வங்கியில் 600 காலியிடங்கள்..!! சம்பளம் ரூ.36,000..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்..!!

Mon Feb 20 , 2023
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெயர்: Industrial Development Bank of India பதவியின் பெயர்: Assistant Manager காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 600 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். சம்பளம்: […]

You May Like