fbpx

’’ இங்க ஒண்ணும் தேறாது , அடுத்த தடவ வயசான ஆளா பாரு’’…திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கணவருக்கு தெரிந்த தில்லுமுல்லு..

’’இங்க ஒண்ணும் தேறாது, அடுத்த தடவ வயசான ஆளா பாரு’’ என்ற குறுந்தகவலை வைத்து மனைவியின் தில்லுமுல்லை ரகசியமாக கண்டுபிடித்து போலீசில் கூண்டோடு பிடித்துக்கொடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி , இவர்களுக்கு சரவணன் (35) என்ற மகன் இருக்கின்றார். கைத்தறி நெசவாளரான இவருக்கு பெற்றோர்கள் சம்மதப்படி புரோக்கர் ஒருவர் மூலம் தஞ்சாவூரின் அய்யம்பேட்டையைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணின் வரன் தேடும் ஜாதகம் கிடைத்துள்ளது. இதையடுத்து பெண் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். தந்தையும் தாயும் விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவரது பெரியம்மா விஜயலட்சுமி ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளார். திருமணம் நடந்தால் புரோக்கருக்கு 1.2 லட்சம் கமிஷன் தர வேண்டும் என விஜயலட்சுமி கூறியுள்ளார். இதனால் மாப்பிள்ளை வீட்டில் கடன் வாங்கிக் கொடுத்து திருமணத்தை நடத்தியுள்ளனர் .

இந்நிலையில் சரிதாவின் செல்போனில் அடிக்கடி விஜயலட்சுமி எண்ணுக்கு மெசேஜ் செல்வதை சரவணன் கவனித்தார். அதில் ஒரு குரல் பதிவு குறுந்தகவல் இருந்துள்ளது. இதை எடுத்து எதார்த்தமாக கேட்டபோது பயங்கர அதிர்ச்சி .. அதில் , ’’ என்னால் , ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது,. இங்க பணம் கிடைக்காது. இங்க ஒண்ணும் தேறாது . என் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. அடுத்த முறை வயதான ஆளாக பிடி இப்போ நீயா வந்து அழைத்துச் செல்வது போல வந்து கூப்பிட்டுச் செல் ’’ என இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் யாரிடம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தனது நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டார். அப்போது நண்பர்கள் ஆலோசனைப்படி கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் எனநினைத்துள்ளனர். எனவே அவர்களின் திட்டப்படி நண்பர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் என்றும் பெண் இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்று எதார்த்தமாக விஜயலட்சுமிக்கு பேசியுள்ளார். அவரும் கணவனைபிரிந்த பெண் ஒருவர் இருக்கின்றார் . என தகவல்களை பரிமாறி உள்ளார். இதையடுத்து தனது நண்பருக்கு பிடித்துவி்டடது. நேரில் அழைத்து வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணும் சரவணன் ஊருக்கு வந்துள்ளார். இவரிடம் கேட்டது போல 80 ஆயிரம் ரூபாய்  புரோக்கருக்கு தர வேண்டும் என கேட்டுள்ளனர். சரி என கூறியதால் படையுடன் கிளம்பி வந்துள்ளார். நேரில் வந்ததும் தனது திட்டங்களை அவர் கண்டுபிடித்தது தெரியவந்தது. வேறு வழியின்றி அனைத்தையும் ஒப்புக் கொண்டனர்..

இதையடுத்துகூண்டோடு போலீசில் பிடித்துக் கொடுத்தார் சரவணன் இது போன்ற கும்பல் திருமணம் என்ற பெயரில் மோசடி செய்து வருகின்றது. இது மக்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

Next Post

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு; 8 மணி நேர இடைவெளியில் இரண்டு பேருந்துகளில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!!

Thu Sep 29 , 2022
ஜம்முகாஷ்மீரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வர உள்ளார். இந்நிலையில் உதம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டொமைன் சொயில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பஸ்ஸில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நடத்துனரும் அவருடைய […]

You May Like