fbpx

களத்தில் இறங்கிய NIA..!! சென்னை, ராமநாதபுரத்தில் அதிரடி சோதனை..!! வெளியான பரபரப்பு காரணம்..!!

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இரண்டு வெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர். அந்த குற்றவாளி சாம்பல் நிற சட்டை, கருப்பு பேன்ட், முகமூடி அணிந்த வாறு கையில் இரண்டு பைகளுடன் வந்துள்ளார்.

பின்னர் ராமேஸ்வரம் ஓட்டலில் உணவருந்திவிட்டு கைகழுவும் இடத்தில் வெடிகுண்டு உள்ள பையை வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள், இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முத்தையால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதேபோல ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

Read More : Job | சூப்பர் அறிவிப்பு..!! டிகிரி, டிப்ளமோ முடித்துள்ளீர்களா..? மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!! கொட்டிக்கிடக்கும் வேலை..!!

Chella

Next Post

Abortion | ’கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உள்ளது’..!! அதிரடியாக நிறைவேறிய சட்ட மசோதா..!!

Tue Mar 5 , 2024
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அங்குள்ள பெண் செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு […]

You May Like