கேரள மாநிலத்தில் பரவி வரும் நிஃபா வைரஸ் வௌவால் மூலம் பரவும் நோயாகும். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998இல் முதல் நிபா வைரஸ் பரவியது. அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கிராமத்தின் பெயரே வைரஸுக்கு சூட்டப்பட்டது. கேரளாவில் நிபா வைரஸ் பரவுவது இது 4-வது முறையாகும். நாட்டின் பிற மாவட்டங்கள் அல்லது பிற பகுதிகளில் நோய் பரவுவதைத் தடுக்க வெகுஜன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40-75% ஆக உள்ளது. எனினும் தற்போது வரை நிபா, வைரஸுக்கு பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி அல்லது நோயைக் குணப்படுத்தக்கூடிய வழக்கமான சிகிச்சை எதுவும் இல்லை. எனவே, இந்த நோயின் அறிகுறிகளையும் தீவிரத்தையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நிபா வைரஸ் அறிகுறிகள் :
நிபா வைரஸ் தொற்று அதிக காய்ச்சலுடன் வளரும், தலைவலி, நோயாளிகள் பெரும்பாலும் தீவிர சோர்வு மற்றும் பலவீனத்தை அனுபவிக்கிறார்கள். தசை வலி மற்றொரு குறிப்பிடத்தக்க அறிகுறியாகும், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். கடுமையான சந்தர்ப்பங்களில், நிபா வைரஸ் மூளை அழற்சிக்கு வழிவகுக்கும்.
கடுமையான சந்தர்ப்பங்களில், நிபா வைரஸ் தொற்று 24-48 மணி நேரத்திற்குள் கோமா நிலை ஏற்படலாம் என்றும் அது உயிருக்கு ஆபத்தானது பிரபல மருத்துவர் ஹரிஷ் சாஃப்லே எச்சரித்துள்ளார். மேலும் வைரஸின் 3 முக்கிய ஆபத்து காரணிகள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
* நிபா என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸாகும். எனவே, விலங்குகள் குறிப்பாக நிபா வைரஸின் இருப்பிடமாக பழ வெளவால்கள் கருதப்படுகின்றன. இந்த வௌவால்களுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு, அவற்றின் மலம் அல்லது உமிழ்நீர் ஆகியவை மனிதர்களுக்கு பரவுவதற்கு வழிவகுக்கும்.
* வௌவால் உமிழ்நீர் அல்லது சிறுநீரால் அசுத்தமான பழங்கள் அல்லது பழச்சாறுகளை உட்கொள்வது தொற்றுநோயை ஏற்படுத்தும்.
* ஒரு நபர் பாதிக்கப்பட்டவுடன், நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடனான நெருங்கிய தொடர்பு மூலமாகவும் பரவுகிறது.