fbpx

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு..? டீக்கடைகள், ஓட்டல்களுக்கு அனுமதியில்லை..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பரிசோதனை, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற முக்கிய கட்டுப்பாடுகளை மத்திய – மாநில அரசுகள் விதித்து வருகின்றன.

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு..? டீக்கடைகள், ஓட்டல்களுக்கு அனுமதியில்லை..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கொரோனா, இந்த வாரம் இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. ஜனவரி மாத மத்தியில் கொரோனா உச்சம் தொடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், பண்டிகை காலங்களில் கட்டுப்பாடு விதிப்பது, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு விரைவில் ஆலோசனை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

#Breaking: பிரதமர் தாயார் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Fri Dec 30 , 2022
பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார். இன்று அவர் காலமானார். அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை […]

You May Like