fbpx

நண்பர்களுடன் பார்ட்டி..!! போதையில் தள்ளாடிய மாணவி..!! தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் HSR லேஅவுட் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவி ஒருவர், தனது நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடியுள்ளார். பார்ட்டி முடிந்ததும் மதுபோதையில் வெளியில் வந்த கல்லூரி மாணவி, தனது இருசக்கர வாகனத்தில் தனியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில், அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தனது வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார்.

இதற்கிடையே, மாணவி போதையில் இருப்பதை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர், இதை பயன்படுத்தி, தனது நண்பர்களை வரவழைத்து மாணவியை கூட்டு வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதி போலீசார், குற்றவாளிகளை 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், “பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கர்நாடகாவை சேர்ந்தவர் கிடையாது என்றும் வேறு மாநிலத்தில் இருந்து இங்கு படிப்பதற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மாணவி தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளார். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ஆதார் கார்டு கட்டாயமில்லை..!! ரூ.6,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி..? உடனே இதை பண்ணுங்க..!!

English Summary

Knowing that the student was intoxicated, the auto driver took advantage of this and invited his friends to gang-rape the student.

Chella

Next Post

2000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஷாஹீன்-2 ஏவுகணை!. வெற்றிகரமாக சோதனை!. பாகிஸ்தானின் திட்டம் என்ன?

Wed Aug 21 , 2024
Pakistan Conducts Successful Training Launch Of Shaheen-II Ballistic Missile

You May Like