fbpx

கணவனுக்கு நைட் ஷிப்ட்!… ஹோட்டலில் காதலனுடன் உல்லாசம்!… கார் ஜிபிஎஸ் டிராக்கர் மூலம் மாட்டிய மனைவி!

பெங்களூரில் தனது மனைவி ஹோட்டலில் ரூம் எடுத்து கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்ததை காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் டிராக்கர் மூலம் கணவன் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். தினமும் நைட் சிப்ட் பணி செய்துவரும் இவர், கடந்த 2020ம் ஆண்டு ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புடன் கூடிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவி அவரது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பது குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவியிடம் இளைஞர் சொல்லவில்லை. இந்தநிலையில், காரில் இருந்து ஜிபிஎஸ் டேட்டா மூலம் தனது மனைவி மற்றொருவருடன் தொடர்பில் இருப்பதை அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து இளைஞர் கூறியதாவது: கடந்தாண்டு ஒரு நாள், நான் வழக்கம் போல இரவு ஷிப்டில் பணியாற்றும் போது எனது காரை யாரோ ஒருவர் வெளியே எடுத்துச் சென்றதை ஜிபிஎஸ் டேட்டாவை விரிவாக ஆய்வு செய்தபோது கண்டறிந்தேன். அது பெங்களூர் ஏர்போர்ட் நோக்கிச் சென்றதும் நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், அதிகாலை 5 மணிக்கு, அங்கிருந்து கார் மீண்டும் எனது வீட்டிற்கு வந்துள்ளது. இதனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. காரை திருடுபவனாக இருந்தால், அவன் ஏன் மீண்டும் எனது வீட்டிற்கே எடுத்து வருகிறான்.. இதையடுத்து நான் அந்த ஹோட்டலுக்கு சென்று இது குறித்துக் கேட்டேன். அப்போது தான் என் மனைவியும் அவரது காதலனும் தங்கள் வாக்காளர் அட்டையைப் பயன்படுத்தி ரூமை புக் செய்துள்ளதைக் கண்டுபிடித்தேன்” என்று இளைஞர் கூறுகினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது மனைவியிடம் இதுகுறித்து கேட்டபோது, மறுப்பு தெரிவித்ததையடுத்து, ஜிஎபிஎஸ் ஆதாரங்களைக் காட்டியுள்ளார். பின்னர் ஹோட்டலுக்கு சென்று கேட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது காதலுடன் சேர்ந்து கொண்டு கணவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளைஞரின் புகார் மற்றும் நீதிமன்ற உத்தரவையடுத்து, மகாலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வீட்டை விட்டு வெளியேறிய அந்தபெண் காதலுடன் வசித்துவருவதாகவும், இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Kokila

Next Post

மோசடி கணக்குகள் என்று அறிவிக்கும்முன் கடன் பெற்றவர்களை வங்கிகள் விசாரிக்கவேண்டும்!... உச்சநீதிமன்றம்!

Tue Mar 28 , 2023
வங்கிகள், கணக்குகளை மோசடி என்று வகைப்படுத்தும் முன் கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கணக்குகளை ஒருதலைப்பட்சமாக மோசடி என்று வகைப்படுத்த வங்கிகளை அனுமதிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. மோசடிகளை வகைப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் சுற்றறிக்கையைப் பின்பற்றும் வங்கிகளுக்கு இது பெரும் பின்னடைவாகும். ரிசர்வ் […]

You May Like