fbpx

பெற்றோர்களே கவனம்… அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை…!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்கள். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி அல்லது கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உதகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது

Vignesh

Next Post

TNPSC தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள்...! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம் இதோ...

Thu Aug 4 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ தொகுதி-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 92 பணிக்‌ காலியிடங்களுக்கான தொகுதி – I தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்‌ 22.08.2022 வரை விண்ணப்பித்துக்‌ கொள்ளலாம்‌. இந்த […]

You May Like